உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணம்; ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசன நேரம் மாற்றம்

சூரிய கிரகணம்; ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசன நேரம் மாற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமும் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1:00 மணிக்கு மூடப்படும். பின்னர் மாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு நடை மூடப்படுவது வழக்கம். இந்நிலையில் அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை திறக்கும் மற்றும் சாத்தும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்பர் 25 அன்று காலை வழக்கம் போல் கோயில் திறக்கப்பட்டு, அன்று மதியம் 12:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பின்பு இரவு 7:00 மணிக்குமேல் நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !