உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்கு ரூ. 17 கோடி!

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணிக்கு ரூ. 17 கோடி!

ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்புகள்:

சென்னை அருகே திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோவிலுக்கு, ரோப் கார் வசதி செய்ய சாத்தியக்கூறு ஆராயப்பட்டு, 8.17 கோடி ரூபாயில் கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. ரோப் கார் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவக்கப்படும். திருத்தணியில் ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறு இல்லாததால், மாற்றுப்பாதை அமைக்கும் பணி ஆராயப்பட்டு வருகிறது. திருக்கழுக்குன்றம் கோவிலுக்கு ரோப் கார் அமைக்க, டெண்டர் கோரப்பட உள்ளது. பழநி இடும்பன் கோவிலுக்கு, புதிய ரோப் கார் அமைக்கப்பட உள்ளது. அறநிலையத் துறை சார்பில், ௧௦ கல்லுாரிகள் அறிவிக்கப்பட்டன; நான்கு கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆறு கல்லுாரிகள் துவக்குவதை தடுக்க, நீதிமன்றம் சென்றுள்ளனர். சட்டப் போராட்டம் நடத்தி, அக்கல்லுாரிகளை துவக்குவோம். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கோபுரம் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. கோவில் திருப்பணிக்கு, 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பணி துவக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !