வர சித்தி விநாயகர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் ஸ்ரீ வர சித்தி விநாயகர் கோயிலுக்கு நேற்று மத்திய நிதியமைச்சர் ஸ்ரீ நிர்மலா சீதாராமன் மற்றும் ஆந்திர மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். முன்னதாக கோயில் அதிகாரிகள் மத்திய மாநில நிதி அமைச்சர்களுக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் கோயில் அதிகாரிகள் மற்றும் சித்தூர் எம் எல் ஏ. எம் எஸ் பாபு மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி ராணா பிரதாப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் . மேலும் நிதி அமைச்சர்களை சித்தூர் மாவட்ட கலெக்டர் ஹரி நாராயணா, எஸ். பி. ரிஷாந்த் ரெட்டி, இணை கலெக்டர் வெங்கடேஷ்வர்லு, சித்தூர் பாராளுமன்ற உறுப்பினர் ரெட்டியப்பா, திருப்பதி பாராளுமன்ற உறுப்பினர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு வரவேற்பு செய்ததோடு மரியாதை பூர்வமாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.