உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னேற்றம் தரும் மூவர்

முன்னேற்றம் தரும் மூவர்


* திருமால் மட்டுமே தெய்வம் என வழிபட்டவர்கள் ஆழ்வார்கள்.
* இவர்கள் பன்னிரண்டு பேர். இதில் முதலாழ்வார் என்பவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
* இவர்கள் முறையே காஞ்சிபுரம், மாமல்லபுரம், சென்னை மயிலாப்பூர் தலங்களில் ஐப்பசி மாத திருவோணம், அவிட்டம், சதய நட்சத்திரங்களில் அவதரித்தனர்.
* திருமாலின் ஆயுதமான சங்கு, கதாயுதம், வாள் அம்சம் கொண்டவர்கள் இவர்கள்.  
* விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுாரில் நேரில் காட்சியளித்த திருமால் மீது
இவர்கள் பாடிய நுால்கள் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி.
* 108 திவ்யதேசங்களில் முதல் மூன்று ஆழ்வார்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவர்.
* வாழ்வில் முன்னேற முதலாழ்வார்கள் பாடிய அந்தாதி பாடல்களைப் பாடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !