நடப்பது நடந்தே தீரும்.
ADDED :1090 days ago
மன்னர் வேட்டைக்கு புறப்படும் போது அவரைக்காண முல்லா சென்றார்.அறிஞர்கள் முகத்தில் விழித்தால் வேட்டை நன்றாக அமையாது என்ற எண்ணம் மன்னருக்கு இருந்தது. ஆதலால் அவரை சிறையில் அடைத்தார். ஆனால், அன்றைய வேட்டையில் நல்ல வெற்றி. மகிழ்ச்சியோடு திரும்பியவர் முல்லாவை விடுவித்தார்.
அவரிடம் ‘‘தங்கள் முகத்தில் விழித்ததால் தான் பெரிய வெற்றியை அடைந்தேன்’’ எனச்சொல்லி சமாதானம் செய்தார் மன்னர். அதற்கு, ‘‘உங்கள் முகத்தில் விழித்ததால் தான் எந்தக்காரணமும் இல்லாமல் சிறையில் இருந்தேன் என வேதனையை வெளிப்படுத்தினார். உடனே மன்னரும் மன்னிப்புக் கேட்டார்.
எது நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ அது தான் நடந்தது என சொல்லி விடைபெற்றார் முல்லா.