தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தேரோட்டம்
ADDED :1085 days ago
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி- உலகம்பாள் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும், மண்டகப்படி சார்பில் தீபாராதனை, சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. பக்தர்கள் சிவ கோஷம் முழங்க நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.