நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1086 days ago
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் நடந்த மண்டல பூஜையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த செப்டம்பர் 8ம் தேதி நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று 42ம் நாள் பூஜையில், சிறப்பு அபிேஷகத்தைத் தொடர்ந்து, மகா சக்தி மாரியம்மனுக்கு உகந்த பச்சைப்புடவை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் பச்சைப்புடவை அணிந்து மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.