திருப்பரங்குன்றம் கோயிலில் உழவாரப்பணி
ADDED :1142 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவிற்கான உழவாரப் பணிகள் நேற்று துவங்கியது. அக். 25ல் சஷ்டி திருவிழா துவங்குகிறது. திருவிழா நடைபெறும் ஆறு நாட்களிலும் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்கள், வளாகத்திலுள்ள சஷ்டி மண்டபம், வள்ளி, தேவசேனா திருமண மண்டபங்கள், கோயில் வளாகம் முழுவதும் நேற்று உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. யாக சாலை நடைபெறும் விசாக கொறடு மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.