முத்துநாயகி அம்மன் கோயில் விழா
ADDED :1082 days ago
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி விழா அக்.,11 செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது. அக்., 18ல் கோயில் கொடிமரத்தில் திருவிகழா கொடி ஏற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தினமும் இரவு அம்மன் வீதி உலா, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் நாளை ( அக்.,25,26ல்) பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அக்.,29, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்து வருகின்றனர்.