சுமங்கலி பூஜை செய்வதன் நோக்கம் என்ன?
ADDED :4857 days ago
பக்தர்களையும் இறைவனாகவே காணும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது இந்துமதம். உமையம்மை மகாலட்சுமி போன்ற தெய்வங்களின் அருளைப்பெற சுமங்கலிப் பெண்களை அம்பாளாக வழிபட்டு, புடவை குங்குமச்சிமிழ் போன்ற மங்கலப் பொருட்களைக் கொடுத்து விருந்தளிப்பது சுமங்கலி பூஜை. இதுமிக உயர்ந்த வழிபாடு. இதனைச் செய்தால் சுமங்கலிகளாக இறந்த மாதர்கள் சந்தோஷப்பட்டு, குடும்பத்தினர் நலமாகவும், தீர்க்கசுமங்கலிகளாகவும் வாழ வாழ்த்துவார்கள்.