உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி, முத்து அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீபாவளி விடுமுறை தினத்தையொட்டி, அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர். அதேபோல, பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மற்றும் கிராமப்புற கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !