அனுவாவி சுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED :1080 days ago
பெ.நா.பாளையம்: பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது.
நேற்று காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, அலங்காரம் மற்றும் அன்னதானம் ஆகியன நடந்தது. இன்று அபிஷேகம், அலங்காரம், சம்ஹார ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இம்மாதம், 30ம் தேதி வரை தொடர்ந்து விநாயகர் பூஜை, சத்குரு சம்ஹார ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் அன்னதான நடக்கின்றன. 30ம் தேதி மதியம், 3:30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி மகா அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மதியம்,12:00 மணிக்கு அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியதடாகம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.