கடலாடியில் முளைப்பாரி உற்ஸவ விழா
ADDED :1231 days ago
கடலாடி: கடலாடி தேவர் மகா சபைக்கு பாத்தியப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் 5ம் ஆண்டு வருடாபிஷேக விழா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115 வது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா மற்றும் 34 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்து வருகிறது. கடந்த அக். 18 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
நேற்று முன்தினம் காலை அக்னி சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் ஊர்வலமும், நேற்று மாலை 4:00 மணி அளவில் 600க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக சுமந்து சென்றனர். இன்று (அக்., 27ல்) அதிகாலை 6:00 மணியளவில் பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு ஆகிய பிரிவுகளில் மாட்டுவண்டி பந்தயம் நடக்கிறது. ஏற்பாடுகளை கடலாடி நகர் தேவர் மகாசபை மற்றும் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.