பரவை முத்துநாயகி அம்மன் கோயில் பால்குட திருவிழா
ADDED :1435 days ago
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இக்கோயில் விழா அக்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வழிபட்டனர். நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தியும், பால்குடம், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று கருப்பணசாமி கோயிலில் பொங்கல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. அக்.,28 பெருமாள் கோயிலில் பொங்கல் விழா, 29 மாலை 3:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வருதல் நடக்கும். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.