இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
ADDED :1150 days ago
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன.
இந்து சமயஅறநிலைத்துறை மதுரை நகை சரிபார்ப்பு அலுவலர் பொன் சுவாமிநாதன், கோயில் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி , ராமர் பூஜாரி, முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. இதில் ரொக்கம் ரூ 24,01265 ( 24 லட்சத்து 1265 ரொக்கமும்) தங்கம் 83 கிராம், வெள்ளி 490 கிராம், பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. காணிக்கை பொருட்களை கோயில் அலுவலர்கள் தன்னார்வமகளிர்சுய உதவிக் குழுக்கள் கணக்கிட்டனர். உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.