கந்த சஷ்டி மூன்றாம் விழா : முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1149 days ago
போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி மூன்றாம் நாள் விழா கோயில் தக்கார் ராமதிலகம் தலைமையில் நடந்தது. முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். வள்ளி, தெய்வாணையுடன் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.