ரிஷப வாகனத்தில் கேதார கவுரி அம்மன் வீதி உலா
ADDED :1423 days ago
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரி அம்மன் கோயிலில் நோன்பு விழாவையொட்டி, அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வந்தார். இக்கோயிலில் அக்., 24 அன்று நோன்பு விழா தொடங்கியது. நேற்று அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்தார். காலை பாலாபிஷேகம் நடந்து, இரவு சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார்.