பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக். 31ல் திருக்கல்யாணம்
ADDED :1045 days ago
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அக்., 31 ல் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இக்கோயிலில் அக்., 25 அன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து தினமும் மாலை சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்., 30 சூரசம்ஹாரம், 31 அன்று காலை 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.