பூமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேகம்
ADDED :1155 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் 14 வது ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. நேற்று மாலை மூலவர் அம்மனுக்கு 7 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபராதனை நடந்தது, திரளாக பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழுவினர் செய்தனர்.