ஏகாதச ருத்ர ஹோமம். 15 சிவாச்சாரியார்கள் யாகம்
ADDED :1155 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம், மகா மிருத்யுஞ்சய சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் 15 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகம் நடத்தினர். 5 மணி நேரம் நடந்த ஹோமத்தில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை நிர்வாகிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லி அம்மன் சாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பால், 11 வாசனை திரவியங்கள் கொண்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் நாடார் உறவின்முறை தலைவர் காமராஜ், செயலாளர் முத்துசாமி, கோவில் டிரஸ்டிராஜரத்தினம், துணை தலைவர் முத்துக்குமார், கோவில் மேலாளர் முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.