உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிக்கு பூமி பூஜை

மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்பணிக்கு பூமி பூஜை

மூணாறு: மூணாறில் பிரணவ சுப்பிரமணியசுவாமி கோயிலை புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

மூணாறு இந்து தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழைமை வாய்ந்த இந்த கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்பட ஐதீகங்கள், அதன்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோயிலில் புதிதாக கோபுரங்கள் அமைத்து புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகள் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. முதல்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் கோபுரங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்து தேவஸ்தான குழு தலைவர் பாபுலால், துணைத் தலைவர் கணேசன், செயலாளர் ஜெயராம், பொருளாளர் வைத்தீஸ்வரன், உறுப்பினர்கள் மணிகண்டன், பாலாஜி, பொன்னுசந்திரன், அர்ச்சகர் சங்கரநாராயணசர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.உடுமலைபேட்டையைச் சேர்ந்த சிற்பி சுதாகரன் தலைமையில் கோபுரங்கள் அமைக்கும் பணி நடக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !