கனகனந்தல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள விஜயவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள விஜய விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமங்கள் நடந்தது. மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேதிகை அர்ச்சனை, வேத பாராயணம், யாக வேள்வி பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, நாடிசந்தானம், தத்துவார்சனை, மூல மந்திர ஹோமம், விசேஷ திரவியகுதி, தீபாராதனை, மகாபூர்ணாகுதி, கலசம் புறப்பாடாகி 10:00 மணி அளவில் மூலஸ்தான கலசம் மற்றும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய விழா குழுவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.