சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1152 days ago
கோவை : கோவை, சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள், பக்தர்கள் புடைசூழ கும்ப கலசம் எடுத்து வந்த சிவாச்சார்யார்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்யகோவில் பிரகாரத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.