சிவகங்கை பொன்னாகுளம் வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4897 days ago
சிவகங்கை: சிவகங்கை அருகே பொன்னாகுளம், வீரமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக., 24 அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து யாகசாலை, பூர்ணாகுதி பூஜைகள் நடந்தது. மூன்றாம் நாளான நேற்று, காலை 7.30 மணிக்கு கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜையுடன், கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 10.45 - 11.30 மணிக்குள் கணேச குருக்கள், கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். பொன்னாகுளம், பனையூர், முத்துப்பட்டி, துக்கால், வீரவலசை, ஆத்தூர், நயினாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, வள்ளிதிருமணம் நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கோவில் நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர்.