உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் கந்தசஷ்டி விழா: இன்று சூரசம்ஹாரம்

திருப்புத்தூரில் கந்தசஷ்டி விழா: இன்று சூரசம்ஹாரம்

திருப்புத்துார்: திருப்புத்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கோயில்களில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா  அக்.25 ல் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:30 மணிக்கு மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இன்று மாலை 4:30 மணிக்கு விநாயகர் தேர் அருகில் சூரசம்ஹாரம் நடக்கிறது. நாளை காலை 9:00 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெறும்.

பூமாயி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினசரி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை உடு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறுகிறது. நாளை காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். காளியம்மன் கோயில் அருகில் ஸ்ரீமுருகன் கோயிலிலும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினசரி மாலையில் அபிேஷக, ஆராதனைகள் நடைபெறுகிறது. இன்று மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹாரம், நாளை காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !