108 திருமுருகன் திருத்தலங்கள் நூல் அறிமுக விழா
ADDED :1107 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், 108 திருமுருகன் திருத்தலங்கள் நூல் அறிமுக விழா நடந்தது. மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில், 108 திருமுருகன் திருத்தலங்கள் நூல் அறிமுக விழா, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார். 108 முருகன் கோவில்களுக்கு செல்லும் வழிகள் மற்றும் 108 கோவில் தலங்களின் சிறப்புகள் அடங்கிய நூலை, சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் ஆகியோர் இணைந்து வெளியிட, மருதமலை அன்னதான கமிட்டியர் திருமடத்தின் தலைவர் மாணிக்கம், செந்தூர் முருகேசன், செல்வராஜ் ஆகியோர் பெற்று கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.