ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர உற்ஸவம்
ADDED :1107 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர், அக். 30- ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் 652 வது திருநட்சத்திர உற்ஸவம் வெகுசிறப்பாக நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை மணவாள மாமுனிகள் சன்னதியில், சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் ஆண்டாள், பெரிய பெருமாள், பெரியாழ்வார் சன்னதியில் மங்களாசாசனம், சாற்றுமுறை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அறநிலைத்துறை கமிஷனர் குமரகுருபரன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி சரவணகார்த்தி, செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், மணியம் கோபி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். இன்று பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திர உற்ஸவம் துவங்குகிறது.