உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் : குவிந்த பக்தர்கள்

மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் : குவிந்த பக்தர்கள்

கோவை: மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடந்தது.

மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று வெகு சிறப்பாக நடந்தது. இதில் மயில் வாகனத்தில் முருகன், ஆட்டுகிடாய் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி மற்றும் குதிரை வாகனத்தில் வீரபாகு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !