/
கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: தங்க மயில் வாகனத்தில் சுவாமி அருள்பாலிப்பு
திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: தங்க மயில் வாகனத்தில் சுவாமி அருள்பாலிப்பு
ADDED :1141 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகு தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் சொக்கநாதர் கோயில் முன்பு சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.