குமரியில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் தரிசனம்
நாகர்கோவில்: குமரி மாவட்ட முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழாவின் 6ம் நாளான நே ற்று சூரசம்ஹார விழா நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்பிரமணியசுவாமி கோவில், தோவாளை திருமலைமுருகன் கோவில், செக்கர்கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள பாலமுருகன் கோவில்களில் கடந்த 25ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் கணபதிஹோமம், அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் உட்பட பலநிகழ்ச்சிகள் நடந்தன. 6ம் நாள் விழாவான நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் கணபதிஹோமம், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, சுவாமி, அம்பாளுக்கு சீர்செய்தல், வேல்வாங்க புறப்படுதல், சுவாமி சூரனை வதம் செய்யபுறப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து சூரசம்ஹாரம் நடந்தது. அனைத்து முருகன் கோவில்களிலும், பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.