முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவம்
ADDED :1108 days ago
கோவை : கோவை குறிச்சியில் உள்ள வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவின் ஒரு பகுதியாக இன்று திங்கட்கிழமை திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தேவசேனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு முருகனை தரிசித்தனர்.