திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1111 days ago
கடலூர்: திருப்பாதிரிபுலியூர், பாடலீஸ்வரர் கோயிலில் ஸ்கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, நேற்று (31ம்தேதி) திங்கட்கிழமை, மாலை வள்ளி தேவசேனா, சமேத ஆறுமுக கடவுள், ஸ்ரீ சண்முகநாதருக்கு, ஸ்தபனாங்க, சிறப்பு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருக பெருமான், ஸ்ரீ சிவசுப்பிரமணியருக்கு, திருக்கல்யாண வைபவம் 07.30 மணி அளவில், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவம், நடைபெற்றது. பாடலீஸ்வரர் சனனதி முன்பு 8.30 மணி அளவில், வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், விவாஹ, சுப முகூர்த்த, திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.