உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டில்லி தமிழ்ச்சங்கத்துக்கு சிருங்கேரி சுவாமி விஜயம்

டில்லி தமிழ்ச்சங்கத்துக்கு சிருங்கேரி சுவாமி விஜயம்

புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் தேதி ஸ்ரீபால வேணுகோபால சுவாமி கோவில், சங்கட மோசன் அனுமான் கோவில் மற்றும் தேவி காமாட்சி அம்மன் கோவில்களுக்கு விஜயம் செய்தார்.

அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் செய்து, மூர்த்திகளுக்கு வஸ்திரங்கள் சமர்ப்பித்து ஆரத்தி செய்து வழிபட்டார். அதில், ஆச்சாரியார் ‘‘ஐப்பசி மாத பூர நட்சத்திரம் என்பது அம்பிகை காமாக்ஷியின் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. ஒரு தெய்வீக ஒற்றுமை என்னவென்றால் இதே நாளில் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் காமாட்சி கோவிலில் தரிசனம் செய்தோம். இன்று புதுடில்லி காமாட்சி கோவிலில் தரிசனம் செய்வது இறைவனின் சித்தம்,’’ என்று குறிப்பிட்டார்.

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீசுவாமி நேற்று டில்லி தமிழ்ச் சங்கத்திற்கு விஜயம் செய்து, அங்கு திரண்டிருந்த தமிழர்களுக்கு அருளுரை வழங்கினார். இதுதவிர, ஜி.எம்.ஆர். ஏரோ சிட்டி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுவாமி அருளுரைவழங்கினார்.  –நமது நிருபர் –: 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !