உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 7ல் அன்னாபிஷேகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 7ல் அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 7ல் அன்னாபிஷேகம் நடக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று  அன்னத்தால் அபிஷேகம்  செய்வது வழக்கம். அதன்படி வரும், 7ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்ரவரர் ஆகியோருக்கு, 100 கிலோ அரிசியால் சாதம் செய்து, அன்னாபிஷேகம் நடக்க உள்ளது.  இதை முன்னிட்டு,  அன்று  மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கப்பட மாட்டர். தொடர்ந்து மாலை, 6:01 மணி முதல் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

கிரிவலம்: ஐப்பசி மாத பவுர்ணமி திதி, 7ம் தேதி மாலை, 4:54 முதல், 8ம் தேதி மாலை, 5:59 மணி வரை  உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 8ம் தேதி  சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோவில் நடை மூடப்படாது. வழக்கம்போல் நடை திறந்திருக்கும். அன்று, கோவில் நான்காம் பிரகாரத்திலுள்ள பிரம்ம தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !