செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1400 days ago
செஞ்சி: செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவில் முருக பெருமானுக்கு வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்மார விழா கடந்த 25ம் தேதி துவங்கியது. முதல் நாள் திருமுருகன் தோற்றமும். மறுநாள் தந்தைக்கு உபதேசமும் நடந்தது. 27ம் தேதி தாருகன் வதமும், 28ம் தேதி சிங்கமுகன் வதமும், 29ம் தேதி வேல்வாங்கும் நிகழ்ச்சியும், 30ம் தேதி மாலை மணிக்கு சூரசம்மார பெரு விழாவும் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியர் அலி, விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மங்கள பொருட்கள் மற்றும் பிரசாத விநியோகம் நடந்தது.