உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்

காரமடை: காரமடை நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து, பாலாலயம் அமைக்கப்பட்டது. காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, அரங்கநாதர் கோவில் அருகே, மிகவும் பழமையான லோகநாயகி அம்பாள் சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து, திருப்பணிகள் நடைபெறுகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள, பரிவார மூர்த்திகளான கணபதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, சூரியன், பைரவர் ஆகிய சுவாமிகளுக்கு பாலாலயம் அமைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !