உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை மகரவிளக்கு சீசன்: இடுக்கி எஸ்.பி., பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

சபரிமலை மகரவிளக்கு சீசன்: இடுக்கி எஸ்.பி., பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

மூணாறு: சபரிமலையில் மகரவிளக்கு சீசன் நெருக்குவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இடுக்கி எஸ்.பி. குரியாகோஸ் ஆய்வு நடத்தினார்.

சபரிமலையில் மகரவிளக்கு சீசன் கார்த்திகை ஒன்றில் துவங்குகிறது. இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு, சத்திரம், புல்மேடு ஆகிய பகுதிகள் வழியாக பாரம்பரிய காட்டு பாதையை பெரும்பாலான பக்தர்கள் பயன்படுத்துவர். அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இடுக்கி எஸ்.பி. குரியாகோஸ் நேரில் ஆய்வு நடத்தினார். சிறப்பு பிரிவு டி.எஸ்.பி.மார்ட்டின், பீர்மேடு டி.எஸ்.பி. குரியாகோஸ், வண்டிபெரியாறு இன்ஸ்பெக்டர் பிலிப் சாம் ஆகியோர் உடனிருந்தனர். பாதுகாப்பு கருதி சத்திரம், புல்மேடு வழியில் காடுகள் வெட்டி அகற்றப்பட்டது. ரோடு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. வருவாய், ஊராட்சி, வனம் ஆகிய துறைகள் இணைந்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.

பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் நவ.15க்குள் பூர்த்தி செய்யப்படும்.அப்பகுதிகளில் சிறப்பு பிரிவு போலீசார் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும்" என எஸ்.பி. குரியாகோஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !