உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசன்ன மஹா கணபதி கோவில் புது தேர் 6ம் தேதி வெள்ளோட்டம்

பிரசன்ன மஹா கணபதி கோவில் புது தேர் 6ம் தேதி வெள்ளோட்டம்

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புகழ்பெற்ற கல்பாத்தி தேர் திருவிழாவிற்கு சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில் புதிய திருத்தேரின் வெள்ளோட்டம் 6ம் தேதி நடைபெறும். தேர் வெள்ளோட்ட பூஜைகள் இன்று (4ம் தேதி) மாலை வாஸ்துசாந்தியுடன் ஆரம்பமாகும். நாளை கலசபூஜையும் ஹோமங்களும் நடைபெறும். ஆறாம் தேதி காலை 9க்கும் 11.30 மணிக்கும் இடையில் சிறப்பு தேர் பூஜை, ரத கும்பாபிஷேகம் நடக்கும். மாலை 3.30 மணியளவில் செண்டை மேளத்துடன் தேரின் முதல் பிரயாணம் கிராம வீதிகளில் நடக்கும்.இது குறித்து நிகழ்ச்சியில் நிர்வாக குழு செயலாளர் முரளி கூறுகையில்: தேர் பூஜைக்கு ஸ்ரீகாந்த் பட்டாச்சாரியார் தலைமை வகிகின்றனர். 37 ஆண்டுக்கு பிறகு பிரசன்ன மஹா கணபதி கோவில் தேர் புதுப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்சிராப்பள்ளி அருகே உள்ள பெரம்பலூரில் இருந்து எட்டிய மணிகண்டன் ஸ்தபதியின் மேற்பார்வையில் 10க்கும் மேலான ஆசாரிமார்கள் ஏழு மாத காலம் பணிபட்டு புது தேர் தயார் செய்துள்ளனர். அலங்காரம் உட்பட புதிய தேருக்கு 40 டன் எடை உள்ளனர். மர சக்கரம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டன் எடையுள்ளனர். கோவில் கமிட்டியின் சொந்தம் செலவில் இத்தேரினை தயார் செய்துள்ளனர். கல்பாத்தி தேர் திருவிழா இம்மாதம் 14, 15, 16 தேதிகளை நடக்கின்றன. 16ம் தேதி பிரசன்ன மஹா கணபதி கோவில் தேர் திருவீதிகளில் உலாவரும். பாலக்காட்டில் முதல்முறையாக வெள்ளியில் தயார் செய்த ஆறரை அடி உயரமுள்ள அஸ்வாவாகனம் (குதிரை வாகனம்) 15ம் தேதி எழுந்தருளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !