உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் கோயிலில் உண்டியல் திருட்டு

ஐயப்பன் கோயிலில் உண்டியல் திருட்டு

வேடசந்தூர்: விருதலைப்பட்டி ஊராட்சி ஈஸ்ட் மேன் தனியார் நூற்பாலை எதிரில் உள்ள சின்னமநாயக்கனூர் பிரிவில், நான்கு வழி சாலையை ஒட்டி ஐயப்பன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் கோவிலுக்கு வந்த பூசாரி ரங்கசாமி பார்த்த பொழுது, கோவில் கேட் பூட்டு மற்றும் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. புகாரின் பேரில், கூம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !