பரமக்குடி சிவன் கோயில்களில் நவ. 7 ல் அன்னாபிஷேக விழா
ADDED :1036 days ago
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் நவ., 7 அன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது.பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் 21ஆம் ஆண்டு அன்னாபிஷேக விழா நவ., 7ல் நடக்க உள்ளது. இதன்படி மதியம் 3:00 மணி முதல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கும்ப ஸ்தாபனம், ஜெபம் தொடங்கி, ஹோமங்கள் நிறைவடைந்து, பூர்ணாகுதி நடக்க உள்ளன. பின்னர் மாலை 6:00 மணிக்கு மூலவருக்கு அன்னாபிஷேகம் மகா தீபாராதனைக்குப் பிறகு பிரசாதங்கள் வழங்கப்படும். ஏற்பாடுகளை அன்னாபிஷேக குழுவினர் மற்றும் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர். இதேபோல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக விழா நடக்க உள்ளது.