உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலச்சேரி சுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம்

மேலச்சேரி சுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: மேலச்சேரி சுப்பிரமணியர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.செஞ்சியை அடுத்த மேலச்சேரி மலை மீதுள்ள சுப்பிரமணியர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 3ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கோபூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமமும், மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்பஅலங்காரம், கடங்கள் யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு சாமி சிலை பிரதிஷ்டை நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு கணபதி பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர பாராயணம், வேதபாராயணம், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், 10 மணிக்கு கோபுர கலச மகா கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மேலச்சேரி கிராம பொது மககள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !