திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED :1399 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்திய பகவானுக்கு சந்தன அபிஷேகம் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு, மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.