கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயிலில் பவித்திர உற்சவ விழா கோலாகலம்
ADDED :1066 days ago
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கொளத்துாரில், கந்தசுவாமி கோவில் பராமரிப்பில் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.
புகழ்பெற்ற இக்கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் பரிவேட்டை தலமாக விளங்குகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை பொங்கல், நவராத்திரி, தீப விழா, பவித்திர உற்சவ விழா விமிரிசையாக கொண்டாடப்படும், இந்தாண்டு பவித்திர உற்சவ விழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, கோவிலில் உள்ள ரங்காநாதர் சன்னிதியில் சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை வழிபாடு, சிறப்பு மலர் அர்ச்சனை நடந்தது. பெருமாள், ரங்கநயாகி தாயார் மற்றும் பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் உபயதாரர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.