ராகவேந்திர மடத்தில் ராதா கார்த்திக துளசி தாமோதர விவாஹம் நிகழ்ச்சி
ADDED :1067 days ago
கோவை: கோவையில் உள்ள கோவைப்புதூர் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் ஸ்ரீ ராதா கார்த்திக துளசி தாமோதர விவாஹம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பூரட்டாதி, உத்திரட்டாதி. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்கள். வம்சவிருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இந்த நிகழ்வில் துளசிமாடம் - நெல்லி மாடத்திற்கு திருமணவைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்ரீராகவேந்திரர் அருள்பெற்றனர்.