திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1146 days ago
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஐப்பசி மாத சனி பிரதோஷத்தையொட்டி, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலில், நந்தி பகவானுக்கு பால், இளநீர், சந்தனத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் நந்தி பகவானுக்கு, பட்டாடை அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. உற்சவர், கோவிலைச்சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தனர். நூற்றுகணக்கான பெண்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.