கைலாசநாதர் கோயிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்
ADDED :1067 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் அன்னாபிஷேகம் நடந்தது. மூலவர் காசி விஸ்வநாதருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பச்சரிசி சாதம் வடிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு சாதம் சாற்றப்பட்டது. பூஜைகளை பாபு சாஸ்திரிகள், வெங்கடேச சாஸ்திரிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.