உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

பெரியகுளம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி மலைமேல் கைலாசநாதர் கோயிலில் வளர்பிறை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநா தருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பெரியநாயகி அம்மன் நந்தீஸ்வரருக்கு‌ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிரிவலம் சென்றனர்.* பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பாலசுப்பிரமணியர், அறம் வளர்த்த நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.* பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஞானாம்பிகை அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. * பெரியகுளம் வர சித்தி விநாயகர் கோயிலில்‌ சொர்ணகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* பெரியகுளம் தையல் நாயகி உடனுறை வைத்தியநாதர் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !