திருப்பரங்குன்றம் கோயில் நாளை நடை சாத்தல்
ADDED :1065 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (நவ.8) காலை 9:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகண பூஜை முடித்து நாளை இரவு 7:31 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இன்று (நவ.7) மாலை 4 54 மணிக்கு மேல் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.