செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வைணவ மாநாடு
ADDED :1065 days ago
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வைணவ மாத மாநாடு நடந்தது.
செஞ்சி வட்ட மதுரகவி ஆழ்வார் திருநாட்சத்திர பரிபாலன சபை சார்பில் ஐப்பசி மாத வைணவ மாநாடு செஞ்சி கோதண்டராமர் கோவிலில் நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோதண்டராமர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 9 மணிக்கு வைணவ மாநாடு துவங்கியது. வெங்கடேசன் தலைமை தாங்கினார். பாலாஜி திருமால் துதிபாடினார். ரங்கநாதன் வரவேற்றார். வந்தவாசி சீனிவாசன் ராமாயண சாரம் சொற்பொழிவு நடத்தினார். சுந்தர் நன்றி கூறினார். எத்திராசன், விருதசாரணி மற்றும் செஞ்சி வட்டத்தை சேர்ந்த பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர்.