கோவை கோயில்களில் ஐப்பசி பெளர்ணமி சிறப்பு வழிபாடு
ADDED :1237 days ago
கோவை : ஐப்பசி பெளர்ணமியான நேற்று கோவை ராம் நகர் ஸ்ரீபிரசன்ன மகாகணபதி கோவிலில் விநாயகருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கோதண்டராமசுவாமி கோவிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சத்யநாராயண பூஜை நடந்தது. இதில் ஆன்மீக பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.